வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா, சமந்தா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா, சமந்தா


மும்பை,

தென் இந்திய திரை உலகில் பிரபல நடிகைகளான நடிகையோர் சமந்தா, ஸ்ரீலீலா ஆகியோர் பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி புதிய படங்களில் நடித்து வருகின்றனர். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா…’ பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார்.

புஷ்பா-2 படத்தில் சமந்தாவுக்கு பதில் ஸ்ரீ லீலா ‘கிஸ்ஸிக்’ என்ற பாடலுக்கு நடனமாடினார். அந்த பாடலைப் போல் இந்த பாடலும் பெரிய அளவில் பிரபலமானது. இதையடுத்து சமந்தாவுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் சமந்தாவும், ஸ்ரீ லீலாவும் பங்கேற்றனர்.

அப்போது தனியாக நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த சமந்தா ஸ்ரீலீலா வருவதை கண்டதும் அவரை அருகில் அழைத்து கட்டிபிடித்தபடி போஸ் கொடுத்தார். இதையடுத்து அவர்களது உறவில் பிளவு என பரவிய தகவல்களுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *