வதந்திகளுக்கிடையே வெளியான 'எஸ்டிஆர் 49' படத்தின் அப்டேட்

சென்னை,
சிலம்பரசன் தக் லைப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இதில், நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடிக்க வடசென்னை படத்தில் நடித்த சில நடிகர்கள் நடிப்பதாகத் தெரிகிறது. அதாவது இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் சிறிய முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிதி பற்றக்குறைக்காரணமாக ‘எஸ்டிஆர் 49’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் ‘எஸ்டிஆர் 49’ படத்திலிருந்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை ஆகஸ்ட் 2வது அல்லது 3வது வாரத்தில் தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.