“வட்டக்கானல்” படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்

“வட்டக்கானல்” படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்


இயக்குநர் பிதக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வட்டக்கானல்’ திரைப்படத்தில் துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர். கே .சுரேஷ் , வித்யா பிரதீப், ‘கபாலி ‘ விஸ்வந்த் , ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். ஏ. ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மாரிஸ் விஜய் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான இந்த திரைப்படத்தை எம் பி ஆர் பிலிம்ஸ் மற்றும் ஸ்கைலைன் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஏ. மதியழகன் மற்றும் எம். வீரம்மாள் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இதனிடையே ‘வட்டக்கானல்’ என்பது தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் எனும் பகுதியிலிருந்து சிறிது தொலைவில் அமைய பட்டிருக்கும் நீர்வீழ்ச்சியுடன் கூடிய சிறு கிராமம் என்பதும், இந்த கிராமத்தின் பின்னணியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பின்னணி பாடகரும், நடிகருமான மனோவின் மகன் துருவன் மனோ கதையின் நாயகனாக நடிக்கும் ‘வட்டக்கானல்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் ‘வட்டக்கானல்’ படத்தின் ‘உனக்கே உனக்கா’ பாடலை நாளை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *