வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள "மாரீசன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு ‘மாமன்னன்’ படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ‘மாரீசன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்
இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ‘மாரீசன்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.