”வடசென்னை 2”, ”எஸ்டிஆர்49”…. வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்-”Vada Chennai 2”, ”STR49”…. Update given by Vetrimaaran

”வடசென்னை 2”, ”எஸ்டிஆர்49”…. வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்-”Vada Chennai 2”, ”STR49”…. Update given by Vetrimaaran


சென்னை,

தனது அடுத்த படத்தின்(”எஸ்டிஆர்49”) அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.

”வாடிவாசல்” படம் தள்ளிபோய் கொண்டே செல்ல, சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார் வெற்றிமாறன்.

இதற்காக சமீபத்தில் புரோமோ படப்பிடிப்பு நடந்தது. ஆனால், கொஞ்சம் இடைவெளி ஏற்பட, படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் ”வடசென்னை 2”, மற்றும் ”எஸ்டிஆர்49” அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில்,

”எனது அடுத்த படத்தின் அப்டேட் (எஸ்டிஆர்49) இன்னும் 10-15 நாட்களில் வெளியாகும். அது முடிந்ததும், தனுஷுடன் வடசென்னை2 படத்தைத் தொடங்குவேன்” என்றார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *