லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ”ஜெயிலர்” பட நடிகை|Lokesh Kanagaraj Pairs Up with Mirna Menon?

சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மிர்னா மேனன் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறார். இது குறித்த பேச்சு வார்த்தைகள் முடிந்து, கடந்த சில மாதங்களாக ஸ்கிரிப்ட் பணிகளில் அருண் மாதேஷ்வரன் ஈடுபட்டு வந்தார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக ”ஜெயிலர்” படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு கதாநாயகியாக சுதா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.