லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – அல்லு அர்ஜுனா?… அமீர் கானா?|Lokesh Kanagaraj’s next with Allu Arjun or Aamir Khan?

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். ஒரு இயக்குநராக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் அதே வேளையில், அவர் நடிப்பிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் “டிசி” படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், லோகேஷ் பல படங்களில் பணியாற்றி வருவதாகவும், அதில் அல்லு அர்ஜுன், அமீர் கான் மற்றும் புதிய ஹீரோக்களுடன் கூட படங்கள் இருப்பதாகவும் வதந்திகள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனுடன் ஒரு சூப்பர் ஹீரோ படம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் லோகேஷின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன்தான் கதாநாயகனாக இருப்பார் என்று முன்னதாக தகவல் வெளியானது.
இருப்பினும், சமீபத்திய ஒரு நேர்காணலில் அமீர் கான், லோகேஷுடன் இன்னும் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் படம் விரைவில் தொடங்கப்படலாம் என்றும் தெரிவித்தார். இது அமீர் கான்-லோகேஷ் படம் கைவிடப்படவில்லை என்பதையும், அது பரிசீலனையில் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இதானால், அடுத்து லோகேஷ் இருவரில் யாரை இயக்க போகிறார்? அல்லது கைதி 2-வா? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.






