லோகேஷுடன் இணைகிறாரா பவன் கல்யாண்?

சென்னை,
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் தெலுங்கில் முன்னணி நடிகருமான பவன் கல்யாண், கடைசியாக ஓஜி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்து அவர் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பவன் கல்யாணின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை விஜய்யின் ஜன நாயகன் மற்றும் யாஷின் டாக்ஸிக் படங்களைத் தயாரித்து வரும் கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
லோகேஷின் கடைசி படமான ரஜினிகாந்தின் கூலி, உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது. இருந்தபோதிலும் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. லோகேஷின் பாணி படத்தில் இல்லை என்று ரசிகர்களும் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.