''லோகா''வில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்…வருந்தும் பிரபல நடிகர்

சென்னை,
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ”லோகா”, பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் ரூ. 200 கோடி வசூலை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், நடிகர் பாசில் ஜோசப், இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக கூறியுள்ளார். மோகன்லாலின் ”ஹிருதயபூர்வம்” படத்தில் கடைசியாக நடித்த பாசில், இயக்குனர் டொமினிக் அருண் ”லோகா” படத்தில் தனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதாக கூறினார்.
ஆனால் வேறு பட வேலைகள் காரணமாக, அதை நிராகரித்தாகவும், இப்போது அதற்கு வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அவர் எந்த கதாபாத்திரம் என்பதை வெளிப்படுத்தவில்லை. தற்போது பால்சில், தமிழில் சுதா கொங்கராவின் ”பராசக்தி” படத்தில் பாசில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.