‘லிப் டு லிப்’ முத்தம் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய சம்யுக்தா ஹெக்டே

சென்னை,
வாட்ச்மேன், கோமாளி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி செய்திகளில் இடம் பிடித்து வரும் சம்யுக்தா ஹெக்டே தற்போது தன் தோழிக்கு லிப் டு லிப் கொடுத்த முத்தம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சம்யுக்தா ஹெக்டே தனது நெருங்கிய தோழியான பூஜிதா பாஸ்கர் திருமணத்தின் போது அவருக்கு லிப்டு லிப் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். முத்தம் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சம்யுக்தா ஹெக்டே, நீ உயிரை விட கொஞ்சம் முக்கியமானவர் என பதிவிட்டுள்ளார்.
சம்யுக்தா ஹெக்டே வெளியிட்டுள்ள முத்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.