”லிட்டில் ஹார்ட்ஸ்” படம் மூலம் இளைஞர்களின் இதயங்களை வென்ற நடிகை…அவரின் அடுத்த படம் எது தெரியுமா?|Do you know about little hearts movie fame shivani nagaram career

சென்னை,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியான ”லிட்டில் ஹார்ட்ஸ்” திரைப்படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில், மவுலி மற்றும் ஷிவானி நகரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தில் காத்யாயனி வேடத்தில் நடித்த ஷிவானி நகரம், ஒரு நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு பாடகி மற்றும் குச்சிபுடி நடனக் கலைஞரும் கூட.
1998-ம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த இந்த நடிகை, சிறு வயதிலிருந்தே குச்சிபுடி கற்றுக்கொண்டார். பின்னர் வில்லா மேரி கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றார்.
இவர் கடந்த ஆண்டும் ”அம்பாஜிபேட்டை மேரேஜ் பேண்ட்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு முன்பு, ஜாதி ரத்னலுவில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது ”லிட்டில் ஹார்ட்ஸ்” படத்தில் காத்யாயனியாக நடித்து இளைஞர்களின் மனதை வென்று வருகிறார். அடுத்து சுஹாஸ் நடிக்கும் ”ஹே பகவான்” படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.