லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய பாலிவுட் நடிகர்

பிரபலமான பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர். இவர் நடிப்பில் சமீபத்தில் தேவா படம் வெளியானது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் ஷாஹித் கபூர் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதாவது, தொண்டு நிறுவன நிதி திரட்டலுக்கான கிரிக்கெட் போட்டியில் ஷாஹித் கபூர் விளையாடினார். இது தொடர்பான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு வெளியான “ஜெர்சி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.