''லக்கி பாஸ்கர் 2''…உறுதிப்படுத்திய இயக்குனர் வெங்கி அட்லூரி

சென்னை,
கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ”லக்கி பாஸ்கர்” படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனர் வெங்கி அட்லூரி, தற்போது தமிழ் நட்சத்திரம் சூர்யாவுடன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், லக்கி பாஸ்கரின் தொடர்ச்சிக்கான வேலைகள் நடந்து வருவதாக அவர் கூறினார். அதேபோல், தனுஷின் ”வாத்தி” படத்தின் தொடர்ச்சி இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
”லக்கி பாஸ்கர் 2” மற்றொரு பிளாக்பஸ்டராக இருக்கும் என்பதால், துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.
வெங்கி அட்லூரி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் தற்போது வேறு படப்பணிகளில் ஈடுபட்டுள்ளதால், லக்கி பாஸ்கர் 2 எப்போது துவங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.