“ரோஜா மல்லி கனகாம்பரம் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

“ரோஜா மல்லி கனகாம்பரம் ” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


கோலிவுட்டில் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இப்படங்களை இயக்கியதோடு, மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உள்பட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கே.பி.ஜெகன் தற்போது ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் நாயகனாகவும் அவர் நடிக்கிறார். இப்படத்தை ‘யுனைடெட் ஆர்ட்ஸ்’, எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர் ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில், ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை, இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளுடன் பகிர்ந்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *