"ரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சு.."- நடிகர் சத்யராஜ்

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், பிரிகிடா சாகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது நீண்டநாள் ஆசை நிறைவேறியதாக பேசியுள்ளார்.
அதாவது, “ரொம்ப நாளாக தனுஷ் சார் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. அவர் ஒரு நடிகராக பல விருதுகளை வாங்கியுள்ளார். ஆனால் ஒரு டைரக்டராக அவருடன் பணி புரியும் போதுதான் அவரை பற்றி தெரிகிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நுணுக்கமாகவும் கவனமாகவும் அவர் செயல்படுகிறார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம்” என்று பேசியுள்ளார்.