ரேஸிங்கில் தீப்பிடித்து நின்ற “அஜித்குமார் ரேஸிங்” அணி கார்

ரேஸிங்கில் தீப்பிடித்து நின்ற “அஜித்குமார் ரேஸிங்” அணி கார்


நடிகர் அஜித்குமார், ‘குட்​பேட் அக்​லி’ படத்தை அடுத்து ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் படத்​தில் மீண்​டும் நடிக்க இருக்​கிறார். இப்படம் பற்​றிய அறி​விப்பு இம்​மாத இறு​தி​யில் வெளி​யாகும் என்று கூறப்​படுகிறது.

இதற்​கிடையே கார் பந்​த​யத்​தி​லும் கவனம் செலுத்தி வரு​கிறார் அஜித். கடந்த ஆண்​டு, அபுதாபி, பார்​சிலோ​னா, மலேசியா உள்பட பல்​வேறு நாடு​களில் நடந்த கார் பந்தய போட்​டிகளில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி​யினருடன் கலந்து கொண்ட அவர் இப்​போது, 24 ஹெச் சீரிஸ்- மத்​திய கிழக்கு டிராபிக்​கான பந்​த​யத்​தில் கலந்​து​கொண்​டிருக்​கிறார்.

துபாயில் அவரை திரை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். அனிருத் அஜித்தை சமீபத்தில் சந்தித்திருந்தார். இவரைத் தொடர்ந்து சிபிராஜ் தனது குடும்பத்துடன் சந்தித்திருந்தார். பின்பு தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் சந்தித்துள்ளனர். ஜிவி பிரகாஷும் சந்தித்துள்ளார்.

இந்நிலையில், அஜித் அணியின் கார் போட்டியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் உடனடியாக காரை நிறுத்தி வெளியே சென்று ஓடினார். பின்பு எந்த விபத்தும் இல்லாமல் தீயணைப்பு உபகரணங்கள் வைத்து கார் அணைக்கப்பட்டது. முன்னதாக இதே போன்று அஜித் அணியின் கார்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *