”ரெட்ரோ” படத்தை வெப் தொடராக வெளியிட திட்டம்

சென்னை,
சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ”ரெட்ரோ” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதே நேரத்தில் ஸ்ரேயா ஒரு சிறப்புப் பாடலில் நடனமாடி இருந்தார்.
மே 1-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இந்தப் படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்து கொண்டார். நான்கு மாதங்களில் ”ரெட்ரோ” படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக நெட்பிளிக்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார். 4-5 எபிசோடுகளாகவும், ஒவ்வொரு எபிசோடும் சுமார் 40 நிமிடங்கள் நீளமானது என்றும் அவர் கூறினார்.