“ரெட்ரோ” படத்தின் “கனிமா” வீடியோ பாடல் வெளியானது!

சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது. ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ.235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பும் சந்தோஷ் நாராயணன் இசையும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், “ரெட்ரோ” படத்தில் இடம்பெற்ற ‘கனிமா’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை விவேக் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.