ரூ.300 கோடி வசூல் செய்த “லோகா” திரைப்படம்

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் – கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘லோகா’ படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
‘லோகா சாப்டர் 1’ திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் எம்புரான் படமும் , மஞ்சுமல் பாய்ஸ் படமும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து இப்படம் இந்தி மொழியிலும் வெளியானது.
இந்நிலையில், ‘லோகா சாப்டர் 1’ படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இம்மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.