ரூ.100 கோடி வசூல் செய்த ‘குபேரா’ படம்.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை,
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ”குபேரா” படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். நேற்றுமுன்தினம் வெளியான ‘குபேரா’ படம் கதை ரீதியாக நல்ல விமர்சனங்களையும், திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்தில் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சேகர் கம்முலா இயக்கிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், குபேரா படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.