ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ‘ஹிருதயப்பூர்வம்’.. நன்றி தெரிவித்த மோகன்லால்

சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘ஹிருதயப்பூர்வம்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தினை பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சங்கீதா, சித்திக், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு பீல் குட் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்துவதால் படத்தை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.
இந்த நிலையில், ‘ஹருதயப்பூர்வம்’ படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு மோகன்லால் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.