ரூ.100 கோடியில் கண்களை மயக்கும் நயன்தாராவின் போயஸ் கார்டன் வீடு

ரூ.100 கோடியில் கண்களை மயக்கும் நயன்தாராவின் போயஸ் கார்டன் வீடு


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் நடிகை நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவர் நடித்துள்ள டெஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் காஸ்மெட்டிக்ஸ், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் சுமார் ரூ.100 கோடியில் கண்களை மயக்கும் வீடு ஒன்றை ஸ்டுடியோ வடிவில் கட்டியுள்ளார். இதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி, அதனை இடித்து தனது கனவுபடி கட்டியுள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்குமே பழங்கால பொருட்கள், மற்றும் கலைநயம் மிகுந்த பொருட்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் அவர்களின் ஸ்டுடியோவில் ஏகப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெரும்பாலும் மரங்களால் ஆன பொருள்களையே வீடு முழுவதும் வைத்திருக்கிறார்கள். தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *