ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் 'சச்சின்' திரைப்படம்

ரீ-ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் 'சச்சின்' திரைப்படம்


சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் ‘சச்சின்’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தினை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

இந்த படத்தில் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்தநிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இப்படத்தை மீண்டும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சச்சின் படம் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *