ரீ-ரிலீஸாகும் ரஜினியின் “எஜமான்” படம்

ரீ-ரிலீஸாகும்  ரஜினியின் “எஜமான்” படம்


ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , மீனா , நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

 

இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே செம்ம ஹிட். சிறுவயதில் ‘ரஜினி அங்கிள்’ என அழைத்த மீனா வளர்ந்து வந்து மீண்டும் ரஜினிக்கே ஜோடியாக நடித்திருந்தார். ரஜினி இப்படத்தில் பயன்படுத்திய வெள்ளை வேஷ்டி காஸ்ட்டியூம் அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. வல்லவராயன், வானவராயன் போன்ற கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவின் அக்மார்க் அடையாளங்களாக அமைந்தன. ‘எஜமான் காலடி மண் எடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ பாடல் மாபெரும் ஹிட்டானது. ஏவி.எம் நிறுவன தயாரிப்புகளில் இந்தப் படத்திற்கு தனித்த பெயர் கிடைத்தது..

இந்நிலையில் ரஜினி, மீனா நடித்த ‘எஜமான்’ படம் வரும் 12ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. ரஜினியின் ‘எஜமான்’ வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *