ரிலீசுக்கு தயாரான ”தி ராஜா சாப்” பட டிரெய்லர் |‘The Raja Saab’ trailer is ready to be unveiled

சென்னை,
பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திகில்-நகைச்சுவை படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ”காந்தாரா சாப்டர் 1” படத்துடன் இணைந்து திரையில் “தி ராஜா சாப்” பட டிரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தின் பிரிண்ட்களுடன் டிரெய்லர் இணைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
”காந்தாரா சாப்டர் 1” படத்தை தயாரிக்கும் ஹோம்பலே பிலிம்ஸ், பிரபாஸுடன் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்த”தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லரை இணைக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி இயக்கியுள்ள ”தி ராஜா சாப்” படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.