ரியோ நடிக்கும் “ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் ரிலீஸ் அப்டேட்

சென்னை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார். மேலும், “ஜோ, ஸ்வீட் ஹார்ட்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ என்ற படத்தில் நடித்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது.
முன்னதாக ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் ‘ஜோடி பொருத்தம்’ என்ற முதல் பாடல் வெளியாகியது. விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் லட்சுமிகாந்த் இப்பாடலை பாடி இருந்தார்.
இந்நிலையில், படத்தின் டீசர் கூலி திரைப்பட இடைவேளியின் போது திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் வெற்றி திரைப்படமாக ரியோவிற்கு அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது