ரிது வர்மாவின் முதல் தெலுங்கு வெப் தொடர்- வைரலாகும் டிரெய்லர்

சென்னை,
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரிது வர்மா. இவர் கடைசியாக சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்த ‘மசாகா’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் தனது முதல் தெலுங்கு வெப் தொடரில் நடித்து வருகிறார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த தொடருக்கு ‘தேவிகா மற்றும் டேனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பி. கிஷோர் இயக்கும் இதில், சிவ கந்துகுரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், சூர்யா வசிஷ்டா, சுப்பராஜு, மவுனிகா ரெட்டி, சோனியா சிங், சாகந்தி சுதாகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானநிலையில், தற்போது இந்த தொடரின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனுடன் இதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடர் ஜூன் 6-ம் தேதி வெளியாகிறது.