ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம்…பெயரை அறிவித்த படக்குழு|Makers unveils the title of Rashmika Mandanna’s next

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம்…பெயரை அறிவித்த படக்குழு|Makers unveils the title of Rashmika Mandanna’s next


சென்னை,

”புஷ்பா” நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ”மைசா” எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில், ராஷ்மிகா ‘மைசா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக ராஷ்மிகா மந்தனா குபேரா படத்தில் நடித்திருந்தார். கடந்த 20-ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் தற்போதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இது மட்டுமில்லாமல், ராஷ்மிகா பாலிவுட்டில் ”தமா” என்ற ஹாரர் படத்திலும் நடித்து வருகிறார். இது இவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *