ராஷ்மிகாவின் “தி கேர்ள் பிரண்ட்” டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடித்துள்ளார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 7ந் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டிரெய்லர் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.