ராஷி கண்ணா- ஸ்ரீநிதி ஷெட்டி நடித்த படத்தின் டீசர் வெளியீடு

சிறந்த செலிபிரிட்டி ஸ்டைலிஸ்டாகப் பெயர் பெற்ற நீர்ராஜா கோனா, தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவருடைய முதல் படம் ‘தெலுசு கட’ ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சித்து , ராஷி கண்ணா, மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் “மல்லிகா கந்தா” ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று வெளியான டீசர், புதுமையான காட்சிகள், தமன் இசை, மற்றும் வண்ணமயமான காதல் கதை அம்சங்களுடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. சித்து ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் கதையமைப்பு, மேலும், இருவரிடமும் திருமணத்திற்கான வேண்டுகோள் வைப்பது டீசரின் முக்கிய அம்சமாக உள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகிறது