“ராம் லீலா” நாடகத்தில் நடிகை பூனம் பாண்டே நடிக்க பா.ஜ.க எதிர்ப்பு

மாடலிங் துறையில் பிரபலமான பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சை எற்படுத்தினார்.
டெல்லியில் புகழ் பெற்ற நாடக சபையான ‘ராம் லீலா குழு’ பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டேவை ராமாயண காதை நாடகத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதில், இலங்கை வேந்தன் ராவணனின் மனைவி மண்டோதரியாக அவர் நடிக்கவிருக்கிறார். நாளை முதல் ஆரம்பமாகும் ராம் லீலா அரங்கேற்றத்தைக் கண்டுகளிக்க இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வருகை தருவார்கள்.
இந்த நிலையில், சர்ச்சைக்ளில் அவ்வப்போது சிக்கிக்கொளும் நடிகை பூனம் பாண்டே அந்தக் கதாபாத்திரமேற்றால் பொருத்தமாக இருக்காது என்பதே இதற்கான முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாஜக மற்றும் விஎச்பி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பூனம் பாண்டேவுக்கு பதிலாக வேறொருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
“ இது எங்களுக்குத் தவறாக தெரியவில்லை. குழுவில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் நடிகை பூனம் பாண்டேவும் ஒருவர்” என ‘ராம் லீலா குழு’ பதிலளித்துள்ளது.