ராம் சரணின் "பெடி" ரிலீஸ் தேதி நாளை வெளியீடு

ராம் சரணின் "பெடி" ரிலீஸ் தேதி நாளை வெளியீடு


சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘ஆர்.சி 16’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது முடிவடைந்திருக்கிறது. நடிகர் ராம் சரணின் பிறந்த நாளன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு ‘பெடி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பெடி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ நாளை காலை 11.45 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *