ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் செந்தில்

ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் செந்தில்


ராமேஸ்வரம்,

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இவரின் வாழைப்பழ காமெடி அனைவராலும் மறக்க முடியாமல் இன்று வரையிலும் பேசும் நகைச்சுவையாக உள்ளது. இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ நடித்திருந்தார். தற்போது யோகி பாபு நடிக்கும் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது மனைவியுடன் ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார். ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *