ராணுவ தளபதியை சந்தித்த மோகன்லால்…தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாராட்டு |Mohanlal meets Army Chief in Delhi, receives commendation for Dadasaheb Phalke win

புது டெல்லி,
நடிகரும் பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், தாதாசாகேப் பால்கே விருது பெற்றநிலையில், புதுடெல்லியில் ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால்,”ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை. இது ஒரு நல்ல சந்திப்பு. தாதாசாகேப் பால்கே விருது இதற்கு ஒரு காரணம். நான் 16 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.புதிய தலைமுறையை ராணுவத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பேன்,” என்று கூறினார்.
மோகன்லால் 2009 ஆம் ஆண்டு பிராந்திய ராணுவத்தில் சேர்ந்தார். லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டார்.