ராகவா லாரன்ஸ் நடித்த ‘புல்லட்’ படத்தின் டீசர் வெளியீடு

சென்னை,
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதனிடையே ராகவா லாரன்ஸ் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘புல்லட்’ படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் காட்சியில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்கனவே வேறொரு நபருடைய வாழ்வில் தொடர்பு இருக்கிறது என காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.