ரமேஷ் வர்மாவின் 'கொக்கரக்கோ' படப்பிடிப்பு நிறைவு

சென்னை,
பிரபல இயக்குனர் ரமேஷ் வர்மா தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ஆர்.வி. பிலிம் ஹவுஸை “கொக்கரக்கோ” திரைப்படத்துடன் தொடங்கியுள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் ஸ்ரீனிவாஸ் வசந்தலா இயக்குனராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
படத்தின் வசனங்களை பிரபல பின்னணிப் பாடகர் சாகர் எழுதியுள்ளார். அவர் மூத்த திரைக்கதை எழுத்தாளர் ஜி. சத்தியமூர்த்தியின் மகனும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் சகோதரருமாவார்.






