ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat to Rajinikanth’s house

சென்னை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், செய்தி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள், கோர்ட்டுகள் என பல இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலானது மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் குறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் ரஜினியின் வீட்டில் சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.