ரஜினியும், நானும் இணைந்து படம் நடிப்போம்- நடிகர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
“தமிழ்நாட்டை போல் தெலுங்கானாவிலும் கல்வி திட்டங்கள் கொண்டு வரப்படும் என ரேவந்த் ரெட்டி கூறி இருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு நீண்ட காலமாக செய்து வருகிறது. அன்ன கொடி எப்போதோ பறந்தது. மறுபடியும் பறக்க விட்டது எனக்கு பெருமை. அதை மற்றவர்களும் பின்பற்றுவது தமிழ்நாட்டுக்கு பெருமை.
நானும், ரஜினியும் இணைந்து படம் நடித்து இருக்கிறோம். மீண்டும் நடிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.
கமல்ஹாசன் -ரஜினிகாந்த் ஆகியோர் மீண்டும் இணையப்போகின்றனர் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இது வெறும் செய்தியாக இருந்தநிலையில், கமல்ஹாசன் தற்போது அதனை உறுதி செய்துள்ளார். இவர்கள் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.