ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ‘கூலி’. இந்தப் படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருப்பதாகவும் அதனால் ஏ சான்றிதழை தணிக்கை குழு அளித்துள்ளது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் தொடங்கியுள்ளது. இன்று இரவு 8 மணியளவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. புக்கிங் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகிறார்கள்.இப்படம் முன்பதிவுகளில் மட்டுமே பல கோடிகள் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.