ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ”வார் 2” நடிகர் |’War 2′ actor congratulates Rajinikanth

சென்னை,
திரைத்துறையில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்த ரஜினிகாந்துக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், வருகிற 15ம் தேதியுடன் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த நிலையில், ரஜினிக்கு திரையிலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வார் 2 நடிகர் ஹிருத்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நடிகனாக நான் முதல் அடி எடுத்து வைத்தது உங்களுடன் தான். என் துவக்க கால ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர்” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ”கூலி” படமும் , ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ”வார் 2” படமும் ஒரே நாளில் அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.