"ரஜினிகாந்த் பாணியை பின்பற்றுகிறாரா தனுஷ்?" – வைரலாகும் வீடியோ

சென்னை,
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தனுஷின் 42-வது பிறந்தநாளையொட்டி ஏராளமான ரசிகர்கள் அவரது இல்லத்தில் கூடினர். நடிகர் தனுஷ் அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்ததைதொடர்ந்து, ரசிகர் மன்றம் சார்பாக பெரிய ரோஜா மாலை அணிவித்து தனுஷின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானநிலையில், ரஜினிகாந்த் பாணியை தனுஷ் பின்பற்றுவதாக சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வரும்கின்றனர்.