ரஜினிகாந்துடன் நடிக்க ஒன்றல்ல, இரண்டல்ல 4 முறை மறுத்த நடிகை…|This famous actress rejected working with Rajinikanth 4 times in a row

சென்னை,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி சொல்லவே தேவையில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். ஒரு சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த இவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைப்பட உலகில் நுழைந்து, தற்போது ”சூப்பர் ஸ்டார்” பட்டத்துடன் வலம் வருகிறார்.
1975-ம் ஆண்டு, கே. பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த ரஜினிகாந்த், ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் பிரபலமானார். சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் ரஜினிகாந்த் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்தார்.
பின்னர், ‘கவிக்குயில்’ படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்த ‘கூலி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக்காக பல நடிகைகள் காத்திருக்கும்நிலையில், ஒரு நடிகை அவரை நிராகரித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், ஒன்றல்ல, இரண்டல்ல 4 முறை இந்த நடிகை நிராகரித்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, நடிகை ஐஸ்வர்யா ராய்தான்,
படையப்பா, பாபா , சிவாஜி, சந்திரமுகி ஆகியவை ஐஸ்வர்யா ராய் நிராகரித்த படங்களாகும். இருப்பினும், இயக்குனர் ஷங்கரின் ”எந்திரன்” படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தார்.