ரஜினிகாந்தின் டாப் 7 மாஸ் படங்கள்…எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் உச்சபட்ச நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடித்த டாப் 7 மாஸ் படங்களை பற்றியும் அவை எந்த ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன என்பதை பற்றியும் தற்போது காண்போம்.
தளபதி (1991) – யூடியூப்
”தளபதி”, மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த் சாமி நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை வெங்கடேசன் தயாரிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார்.
பாஷா (1995) – அமேசான் பிரைம் வீடியோ
”பாட்ஷா”, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் நடித்த அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை வீரப்பன் தயாரிக்க, தேவா இசையமைத்திருந்தார்.
படையப்பா (1999) – அமேசான் பிரைம் வீடியோ
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ”படையப்பா”. இத்திரைப்படத்தினை ஏ.எம் ரத்னம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
சிவாஜி: தி பாஸ் (2007) – ஜீ5/அமேசான் பிரைம் வீடியோ
”சிவாஜி : தி பாஸ்” படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
எந்திரன் (2010) – சன் நெக்ஸ்ட்/அமேசான் பிரைம் வீடியோ
”எந்திரன்”, சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படம். கலாநிதி மாறன் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
பேட்ட (2019) – ஜியோஹாட்ஸ்டார்
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, சசிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
ஜெயிலர் (2023) – அமேசான் பிரைம் வீடியோ
நெலசன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் ஜெயிலர். கலாநிதி மாறன் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.