ரசிகர்களுக்காக இதை பகிர்ந்தேன்..”- சிலம்பரசனின் வைரல் டுவிட் | “I shared this for the fans..

ரசிகர்களுக்காக இதை பகிர்ந்தேன்..”- சிலம்பரசனின் வைரல் டுவிட் | “I shared this for the fans..


சென்னை,

‘தக் லைப்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்தபடம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *