“யோலோ” படத்தின் டீசர் வெளியீடு

மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், பேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள ‘யோலோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்க, முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா பியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் சகிஷ்னா சேவியர் இசையில், ரசிகர்களைக் கொள்ளை கொள்ளும் வகையிலான 6 பாடல்கள் படத்தில் உள்ளது. இதில் ஒரு அழகான மெலடிப் பாடலை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் மற்றும் பிரியங்கா இணைந்து பாடியுள்ளனர்.
இந்நிலையில் தேவ் நடித்துள்ள ‘யோலோ’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.