யூடியூபில் வெளியாகும் அமீர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான் . வர்த்தக ரீதியான திரைப்படங்கள் மட்டுமல்லாமல், பல புரட்சிகர கதைகளைத் தேர்ந்து நடித்ததால், மொழியைக் கடந்த ரசிகர்கள் இவருக்கு ஏராளம். இவரது நடிப்பில் கடந்த மாதம் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படம் வெளியானது. இதில், நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மனநலம் பாதித்த மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக அமீர்கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியிடப்போவதில்லை என அமீர்கான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி யூடியூபில் அனைவரும் இலவசமாகக் காணும் வகையில் வெளியாக உள்ளது.