யுக்தி தரேஜா படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்?

சென்னை,
கிரண் அப்பாவரத்தின் கே-ராம்ப் படம் வருகிற 18 ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஜெயின்ஸ் நானி இயக்கும் இந்தப் படத்தில் யுக்தி தரேஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு ‘ஏ’ (Adults Only) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இது உண்மையாக இருந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அது படத்தின் பாக்ஸ் ஆபீஸின் திறனை கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
இந்த படத்தில் சாய் குமார், நரேஷ் விஜயகிருஷ்ணா, கம்னா ஜெத்மலானி, முரளிதர் கவுட், வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்டு ஆகியவற்றின் கீழ் ராஜேஷ் தண்டா மற்றும் சிவா பொம்மக்கு இணைந்து கே-ராம்பை தயாரித்துள்ளனர்.