யுக்தி தரேஜா நடித்த ‘கே-ராம்ப்’ பட டிரெய்லர் வெளியீடு|Kiran Abbavaram’s K-Ramp trailer: Non-stop entertainment

சென்னை,
கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘கா’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தில்ருபா திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தற்போது இவர் ‘கே-ராம்ப்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹாச்யா மூவீஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை ஜெயின்ஸ் நானி இயக்குகிறார்
யுக்தி தரேஜா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.