யாஷிகா ஆனந்தின் அடுத்த படம் ”டாஸ்”|Yashika Aannand’s next titled Toss

சென்னை,
சந்தானத்தின் ”டிடி நெக்ஸ்ட் லெவலில் கடைசியாக நடித்த யாஷிகா ஆனந்த், தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ”டாஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
சகு பாண்டியன் இயக்கும் இந்த கிரைம் திரில்லரில், ரத்தன் மவுலி, விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கோவில்பட்டி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட குழு திட்டமிட்டுள்ளது.