யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ..!- எதிர்கால வாழ்க்கைத் துணை பற்றிய பேசிய தமன்னா | Who is it given to..!

மும்பை,
பால்நிறத்தழகி என்று வர்ணிக்கப்படும் தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, தனது எதிர்கால வாழ்க்கைத் துணை பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘நான் சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன். நான் கிடைத்தது முற்பிறவியில் செய்த புண்ணியம் என அந்த நபர் நினைக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கைத் துணையாக அமையவேண்டும்.
அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை” என்று குறிப்பிட்டார். தமன்னாவின் இந்த கருத்தை பார்த்து, ‘தலைவிக்கு திருமண ஆசை வந்துடுச்சுடோய்…’ என ரசிகர்கள் ‘கமெண்ட்’ அடித்து வருகிறார்கள்.